27th November 2020

நாகையில், ஏழை மாணவி படிப்பை தொடர வீணை வாங்கிக் கொடுத்த சமூக ஆர்வலர்கள்

வேதாரண்யம் அருகே உள்ள மருதூரில் வறுமையால் இசைபடிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு சமூக ஆர்வலர்கள் வீணை இசைக்கருவியை வழங்கி உதவி செய்துள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி அன்புமணி. இவருடைய தந்தை கோவிந்தராசு ஐந்தாண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில் தாய் சுமதி அங்கன்வாடியில் வேலை பார்த்து அன்புமணியையும் மற்ற மூன்று மகள்களையும் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்து வருகிறார்.

இசையில் அதிக ஆர்வமுடைய அன்புமணி 12ஆம் வகுப்பு முடித்து விட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு குரலிசை வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளார். வீணை இசைக் கருவி இருந்தால்தான் இசை வகுப்பில் சேரமுடியும் என்ற நிலையில் வறுமையின் காரணமாக வீணை வாங்க முடியாமல் அன்புமணி கவலையில் இருந்தார். மாணவி அன்புமணி வீணை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்த விபரம் அந்த பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் மூலம் வாட்ஸ் அப் குரூப்பில் வெளியானது. இசைபடிப்பு பயில வறுமை தடையாக இருப்பதை அறிந்த சிங்கப்பூரில் உள்ள மதிப்புக்குரியவர்கள் அறக்கட்டளையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாணவி அன்புமணி இசை இளங்கலை வகுப்பில் சேர்வதற்கு வசதியாக ரூ 25 ஆயிரத்திற்கு வீணை வாங்கி வழங்கி உள்ளனர். இந்த நிலையில் இசையில் ஆர்வமுடைய மாணவி அன்புமணி இசை படிப்பை தொடர அரசின் உதவியை எதிர்பார்த்து உள்ளார்”,

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts