29th November 2020

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(32). நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர். மோட்டார் சைக்கிளில் மணிகண்டன், நெல்லித்தோப்பு பகுதியில் வந்து கொண்டு இருந்த போது 4 பேர் கும்பல் வழி மறித்தது.

பின்பு ஆயுதங்களால் அந்த கும்பல் மணிகண்டனை வெட்டி விட்டு தப்பியோடியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் கொண்டு செல்லும் வழியிலே அவர் இறந்து போனார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து அவரது மனைவி விஜயகுமாரி, உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரசிகர் மன்றம் தொடர்பாக மணிகண்டனுக்கும், மன்ற நிர்வாகியான ஆட்டுபட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகருக்கு முன் விரோதம் இருந்து வந்தது.

இதன் காரணமாக ராஜசேகர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

SOURCE

More News

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்

admin See author's posts

குணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

admin See author's posts

திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை

admin See author's posts

’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது

admin See author's posts

கொள்ளிடம் அருகே, மழை நீரில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

admin See author's posts

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts