மயிலாடுதுறை,செம்பனார்கோயில் விளநகர் வள்ளலார் கோவில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் விளநகர் ஸ்ரீ வேயுறு தோளியம்மை உடனாகிய ஸ்ரீ துறை காட்டும் வள்ளலார் கோவில் மகா கும்பாபிஷேகம் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு இணைக் கோவிலாக செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தி துறைகாட்டும் வள்ளலார் கோவில் உள்ளது.

இக்கோவில் மிகவும் பழமையான கோயிலாகும். கடந்த1959 ஆம் ஆண்டில் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களின் ஆட்சிக் காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிலிருந்து கடந்த பல வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் சிதிலடைந்து காணப்பட்டதால், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணி வேலைகள் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நடைபெற்று வந்தது.

கொரோனா ஊரடங்கால் திருப்பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற 4-ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அன்று யாகசாலை பிரவேசம் 1-ஆம் கால பூர்ணா ஹுதி தொடக்கத்தை முன்னிட்டு தர்மபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கடங்கள் புறப்பட்டு மகா யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள் மற்றும் யாகங்கள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி ஸ்ரீமத் திருஞானசம்பந்தர் தம்பிரான், திருக்கடையூர் ஸ்ரீமத் சோமசுந்தரம் தம்பிரான், வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான், சீர்காழி ஸ்ரீமத் சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், குமரகட்டளை தேவஸ்தானம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திருக்கூட்டத்து அடிகளார்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts