மயிலாடுதுறை குத்தாலத்தில் புயல் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு


மயிலாடுதுறையில் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரம்பூர் சேத்தூர் எடக்குடி தத்தங்குடி கழனிவாசல் ஊராட்சிகளில் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கடுமையான மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் அறிவுறுத்தினார். பொதுமக்கள் கருத்துக்களை கேட்டுக்கொண்டு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூரினார். உடன் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் ஒன்றிய அலுவலர்கள் ரெஜினாமேரி, தமிழ் கோடி மற்றும் அரசு அதிகாரிகள் மங்கைநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் சேத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.