25th November 2020

மயிலாடுதுறையில், ‘பிகில்’ வெற்றியடைய மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். இப்படம் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் திரைப்படம் வெற்றியடைய வேண்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விஜய் படம் வெற்றியடைய வேண்டியும், விஜய் நீடுழி வாழ வேண்டியும் அவர்கள் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து வடக்கு மாவட்ட தலைவர் குட்டி.கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள், கோயில் வளாகத்தில் தரையில் மண்சோறு சாப்பிட்டு, பிரார்த்தனை செய்தனர். படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Leave a Reply