25th November 2020

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய நாளை கடைசி – நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய நாளை(15-ஆம் தேதி) கடைசி நாள் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளர்.

மார்ச் மாதம் 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி வாக்காளர் தங்களின் பெயர் பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவினர் வகை, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விபரங்களை திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு திருத்தம் செய்யும் பணிகள் நாளை (15-ஆம் தேதியுடன்) நிறைவு பெறுகிறது. எனவே வாக்காளர் தங்களது திருத்தங்களை பின்வரும் ஆவணங்களான பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை, உழவர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு திருத்தங்கள் மேற்கொள்ளலாம். வாக்காளர் உதவி மைய மொபைல் செயலி, வாக்காளர் சேவை மையம், அரசு இ-சேவை மையம், பொது சேவை மையம் மற்றும் வாக்கு சாவடி நிலைய அலுவலர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் விபரங்களை சரிபார்த்திடவும், விடுபட்ட பெயர்களை சேர்த்திடவும், இறந்த மற்றும் இடமாறியவர்களின் தகவல்களை அளித்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி 100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply