வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா; எப்படி செக் பண்ணுவது?

அடுத்த சில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் வேலைகளில் ஈடுபட்டது. பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டன. இந்த சூழலில் 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 20) வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இதில் ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர். பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் ஆவர். அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் ஆண்கள் 3,48,262 பேர். பெண்கள் 3,46,476 பேர். மூன்றாம் பாலினத்தவர் 107 பேர் அடங்குவர்.

குறைந்தபட்சமாக சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 272 பேர் உள்ளனர். அதில் 91,936 பேர் ஆண்கள். 84,281 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 55 பேர் ஆவர். மாவட்ட வாரியாக பார்க்கும் போது, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 8 ஆயிரத்து 829 பேர் இருக்கின்றனர். அதில் ஆண்கள் 1,73,0117 பேரும், பெண்கள் 1,76,7940 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 772 பேரும் அடங்குவர்.

மாவட்டத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 804 பேர் இருக்கின்றனர். அதில் ஆண்கள் 5,00,626 பேரும், பெண்கள் 5,27,127 பேரும் அடங்குவர். மூன்றாம் பாலினத்தவர் 51 பேர் ஆவர். தமிழகத்தில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 597 பேர் ஆவர். புதிய வாக்காளர்கள் (18 – 19 வயது) 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேர் ஆவர். அதிகபட்சமாக சென்னையில் 49 ஆயிரத்து 148 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 6 ஆயிரத்து 243 பேரும் அடங்குவர்.

இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம். புதிதாக தங்கள் பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6ஐ சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் www.nvsp.in என்ற இணையதளத்தைக் காணலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts