எலும்பு மரணம் என்றால் என்ன..? எப்படி உருவாகிறது…? அறிகுறிகள் என்ன…?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலும்பு மரணம் என்ற நோய் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலும்பு மரணம் என்ற நோய் ஏற்படுபவர்களுக்கு, இடுப்பு, மூட்டு மற்றும் தொடை எலும்புகளில் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. எலும்பியல் துறை தலைவர் டாக்டர் சஞ்சய் அகர்வாலா, பி.டி இந்துஜா மருத்துவமனை மற்றும் எம்.ஆர்.சி மும்பையின் டாக்டர் மயங்க் விஜயவர்ஜியா ஆகியோர் இது தொடர்பாக ஆய்வு செய்து, மருத்துவ ஆய்வறிக்கை எழுதியுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் இது கொரோனா வைரஸின் பக்கவிளைவு என தெரிவித்துள்ளனர்.

BONE DEATH என்றால் என்ன?

அவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்று அழைக்கப்படும் எலும்பு மரண நோயானது, எலும்புக்கு இரத்த சப்ளை பாதிக்கிறது. மேலும், இது எலும்பின் செயல்திறனை மெதுவாக கொள்ளக்கூடிய ஒரு நோய் ஆகும். இது எலும்பு மற்றும் எலும்பைச் சுற்றி நிறைய அமைப்பு இருப்பதால், இந்த நோயின் பாதிப்பு உடனடியாக அதன் தீவிரத்தை காட்டாது. மெது மெதுவாக தான் அதன் பாதிப்பை செயல்படுத்தும்.

உங்களுக்கு இடுப்பில் வலி வரும்போது, ​​இயக்கத்திற்கு ஒரு கட்டுப்பாடு இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கோவிட் -19 காரணமாக பாதிக்கப்பட்ட நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்பட்ட நோயாளிகளுக்கு இடுப்பில் இந்த பிரச்னை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எலும்பு இறப்பு இருப்பதை எவ்வாறு அடையாளம் காண்பது?

மருத்துவ ஆலோசனையை பெறுவதே சிறந்த வழி என்றும், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எலும்பு இறப்பை அடையாளம் காண வெற்று எக்ஸ்-ட்ரே எடுத்துக்கொள்வது மட்டும் போதாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை

இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது மூன்று மருத்துவர்களிடம் தான். இந்த நோயை ஆரம்பகால நிலையில், கண்டறிந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும். இல்லையென்றால், இது உடல் அளவில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

இந்த நோய்க்கு முழுமையாக சிகிச்சையளிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகும். இந்த நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது, 3 முதல் 6 வளங்களுக்கு இடுப்பு பகுதிகளில் உள்ள வலிகள் குறைந்து விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கும் கோவிட் -19 சிகிச்சையின் போது பரிந்துரைக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்து தான் பாதி அளவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Source: தினச்சுவடு

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page