21st September 2021

தமிழக தேர்தலில் ஆண்களை விட அதிகம் வாக்களித்த பெண்கள் !

தமிழக தேர்தலில் ஆண்களை விட அதிகம் வாக்களித்த பெண்கள்

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர். 9 மாவட்டங்களில் மட்டுமே ஆண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்.தமிழக சட்டசபைத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி 72.78 சதவீதம் பதிவானதாக கூறப்பட்ட நிலையில், இந்த புதிய தரவுகளை அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிட்டுள்ளார். மேலும், மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளதாகவும், 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.வாக்களித்த 4.57 கோடி பேரில் 2.31 கோடிப் பெண் வாக்காளர்கள் என்றும், 2.26 கோடி ஆண் வாக்காளர்கள், 1,419 மூன்றாம் பாலினத்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் மட்டுமே ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

Source : தினமலர்

More News

சிதம்பரம் அருகே உள்ள வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு!

admin See author's posts

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!

admin See author's posts

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

You cannot copy content of this page