22nd October 2021

மே 4 முதல் யாஹூ கேள்வி-பதில் தளம் மூடப்படுகிறது !

கேள்வி – பதில் தளமான யாஹூ ஆன்ஸ்வர்ஸ் வரும் மே 4-ஆம் தேதி முதல் மூடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி – பதில் தளமான யாஹூ ஆன்ஸ்வர்ஸ் வரும் மே 4-ஆம் தேதி முதல் மூடப்படவிருப்பதாகவும், அதிலிருக்கும் விவரங்கள் காப்பகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டு முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் தளம் இயங்கி வருகிறது. 16 ஆண்டு கால வரலாறைக் கொண்டிருக்கும் யாஹூ ஆன்ஸ்வர்ஸின் அனைத்துப் பக்கங்களிலும் தற்போது மூடப்படும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், யாஹூ ஆன்ஸ்வர்ஸ் 2021, மே 4-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. முதல் நடவடிக்கையாக, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல், யாஹு ஆன்ஸ்வர்ஸ் இணையதளம் படிக்க மட்டுமே இயலும் தளமாக மாறும். அதேவேளையில், யாஹுவின் மற்ற சேவைகள் அல்லது யாஹூ கணக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் புதிய தகவல்கள் எதுவும் யாஹூ ஆன்வர்ஸில் பதிவேற்றம் செய்யப்படாது. ஆனால், அதிலிருக்கும் தகவல்களை பயனாளர்கள் படிக்க இயலும்.

மே 4ஆம் தேதி முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் பக்கம் செயல்படாது. அது யாஹூ முகப்புப் பக்கத்துக்கு திருப்பி விடப்படும்.

யாஹூ ஆன்ஸ்வர்ஸில் இருக்கும் தங்களது தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கோரிக்கைகைளை வைக்க ஜூன் 30ம் தேதி தான் இறுதிநாள்.

ஒருவர் அளித்த தகவல்களை கோரிக்கை வைத்த 30 நாள்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source : தினமணி

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page