மஞ்சள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விலை கடும் சரிவைச் சந்தித்து வந்ததால், இப்பகுதி மஞ்சள் விவசாயிகள் மிகுந்த விரக்தியில் இருந்து வந்தார்கள். இந்நிலையில் தான் தற்போது மஞ்சள் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியிருப்பது இவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய விலை…