மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊர்திசேவை: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 கோடி மதிப்பிலான 4 புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்:-மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அவசரகால சிகிச்சை பெறுவதற்காக 12 அவசரகால உறுதியான 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனையில் கொண்டு செல்வது, வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வாகன வசதி இன்றி தவிப்பவர்களுக்கு உதவுவது போன்ற சேவை பணிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டு அவசர கால ஊர்தி பழுதடைந்தது. இது தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் அடங்கிய நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.

பழுதடைந்த வாகனங்களுக்கு மாற்றாக 2 வாகனங்களும், மங்கைநல்லூர் திருமுல்லைவாசல் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இரண்டு 108 ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டன. புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா கொடியசைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றிட தொடங்கி வைத்தார்.

வானங்களுக்கு பூஜை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் மகேந்திரன், மாவட்ட இணை இயக்குனர் சிவக்குமார், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page