3rd December 2021

22 வயதான 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

108 ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றிய 22 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், திருப்பூர் மாவட்டம் மங்களம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பாக அமைந்துள்ளது. இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் முதல் கொரோனா உயிரிழப்பாகவும் பதிவாகியுள்ளது. கோவை இ.எஸ்.மருத்துவமனையில் தற்போது 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page