1st August 2021

வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு!

குடமுழுக்கு விழாவையொட்டி வைத்தீஸ்வரன்கோவிலில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரசித்திபெற்ற வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (29.04.21) குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. ஆனால் பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கூட்டம் கூடுவதை தடுக்க நாளை வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ( 29.04.21 ) அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் லலிதா கூறியுள்ளார்.

பால், மருந்து கடைகள் மட்டும் திறந்திருக்கும். அவை தவிர மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் சுற்றி நான்கு வீதிகள், மட வளாகங்கள் மற்றும் சுவாமி சன்னதி தெருவில் 5 அல்லது ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுதலை தடுக்கும் நோக்கிலும் பொது சுகாதாரம், பொதுநலன் , பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் இந்த தடை ஆணை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பிறப்பித்துள்ளார்.

Source: News TM

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page