21st September 2021

சென்னை சேப்பாக்கத்தில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது!

ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடப்பாண்டு இந்தியாவின் ஆறு நகரங்களில் மட்டும் நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் லீக் போட்டிகளும், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் மோடி மைதானத்திலும் நடைபெறுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது போல் இல்லாமல் நடப்பாண்டு இந்தியாவிலேயே போட்டிகள் நடைபெறுகிறது. இருப்பினும் கொரோனோ பரவல் அதிகரித்ததன் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அத்துடன் சிஎஸ்கே உட்பட எட்டு அணிகளுக்கும் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இல்லாமல், சொந்த மைதானத்தில் அணிகளுக்கான போட்டிகள் இல்லாமல் நடைபெறுவது நடப்பாண்டும் ஐபிஎல் போட்டி மீதான சுவாரஷ்யத்தை குறைத்துள்ளது. கடந்த சீசன் நடந்து முடிந்து ஆறு மாதத்திற்குள் நடப்பு சீசன் தொடங்குவதால் போட்டிகளில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது எனவும். பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இல்லாததாலும் கடந்த சீசனைப்போலவே அணிகளின் செயல்பாடுகள் இருக்கும் என கூறுகிறார் கிரிக்கெட் விமர்ச்சகர் சுமன் சி ராமன்.

நடப்பாண்டு கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் அறிவித்து வீரர்களின் ஏலமும் நடைபெற்றதால் அணிகள் சொந்த மைதானத்திற்கு ஏற்றார் போல் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு சொந்த மைதானத்தில் போட்டிகள் இல்லை என அறிவித்தது சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என கூறுகிறார் கிரிக்கெட் வீரரும், விமர்ச்சகருமான கிஷோர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்த வரை தோனி, ரெய்னா, டு பிளஸி, ராயுடு, ஜடேஜா, உத்தப்பா, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்கள் நாட்டுக்கான அணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களாக இருப்பதால் கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு மற்ற போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக நடப்பு தொடரில் களமிறங்குகின்றன.

நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி அசுர பலத்தில் களமிறங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கும் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.

போட்டிகள் அனைத்தும் 7.30 மணிக்கும் தொடங்குகின்றன. ஒரே நாளில் இரண்டு போட்டிகள் இருக்கும் பட்சத்தில் மாலை 3.30 மணிக்கு மற்றொரு போட்டி நடத்தப்படவுள்ளது.

More News

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!

admin See author's posts

மயிலாடுதுறை: வீர வணக்கம் நாள் கூட்டம் எஸ்.ஆர்.எம்.யு சார்பில் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது!

admin See author's posts

மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு!

admin See author's posts

You cannot copy content of this page