18th October 2021

2 நாள் முழு ஊரடங்கு அமல்: வெறிச்சோடியது மும்பை!

மகாராஷ்டிராவில் வார இறுதி முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனால் மும்பை நகரமே வெறிச்சோடியுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.

அதன்படி மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. ஹோம் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி இன்றும் நாளையும் அங்கு முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த வார இறுதி ஊரடங்கு திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும். மும்பையில் ஒட்டுமொத்த ஊடரங்கு கடைபிடிக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தும் இல்லை. இதனால் மும்பை நகரமே வெறிச்சோடியுள்ளது.

Source: தி இந்து தமிழ்

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page