26th October 2021

குத்தாலம், கொள்ளிடம் பகுதிகளில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் சாவு!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை யாதவ தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது40). இவர்களின் குடிசை வீடு சேதமடைந்து இருந்ததால் இதனை புதுப்பிப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு புது கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

அன்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மாரியம்மாள் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். குடிசை வீடு சீரமைப்பு காரணமாக வீட்டிற்கு செல்லக்கூடிய மின் வயர்கள் மற்றும் மீட்டர் பாக்ஸ் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதனை மாரியம்மாள் மூட முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கொள்ளிடம் அருகே கடலோர கூழையார் கிராமத்தை சேர்ந்த முத்து மனைவி லட்சுமி (42). இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கூழையார் கிராமம் பெருமாள் கோவில் அருகே மெயின் ரோட்டில் வந்த போது மழையால் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் இருந்து அறுந்து தொங்கி கொண்டிருந்த மின்கம்பி லட்சுமியின் கழுத்தில் பட்டதில் அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page