500 தனியார் பள்ளிகளுக்கு 22 வகையான விதிமுறை – பள்ளி கல்வித்துறை அதிரடி

வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளிக்கூட வளாகத்துக்குள் வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவர் பூங்காவனம் (வயது 60) மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி (34), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளியின் முதல்வர் தனலட்சுமி ஆகிய 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வரிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 22 வகையான விதிமுறைகளை கடைபிடிக்க தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள 500 பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
22 வகையான விதிமுறைகள் பின்வருமாறு:-
  • பள்ளிப் பேருந்துகள், வாகனங்கள் முறையாக பராமரித்து ஆண்டுதோறும் ஆ.டி.ஓ. பரிசோதனைக்கு உட்படுத்தி வாகனங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
  • புதுப்பிக்காத வாகனங்களை இயக்க கூடாது.
  • உரிய கல்வித் தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.
  • மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து திரும்ப சென்று விட பயன்படுத்தப்படும் பள்ளி பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்களில் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும்.
  • மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்களில் உதவியாளர்கள் நியமிக்க வேண்டும்.
  • பள்ளி வாகனங்களில் அதிக அளவு மாணவர்களை ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது. என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

 

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page