மயிலாடுதுறை நகராட்சி மன்ற உறுப்பினராக 23 வயது இளைஞர் பதவி ஏற்பு!



மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளுக்கு கடந்த 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ௨௨ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 24 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான பாலு தலைமையில் பதவிப்பிரமாணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். மேலும் நகராட்சியில் 16-வது வார்டில் போட்டியிட்ட 23 வயதான இளைஞர் சர்வோதயம் வார்டு உறுப்பினராக பதவிப் பிரமாணம் உறுதி ஏற்றுக் கொண்டார். அப்போது சக வார்டு உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Advertisement