2ம் நாள் பொது வேலை நிறுத்தம்: தமிழகம் முழுவதும் இன்று 90 % பேருந்துகள் இயக்கம்.! போக்குவரத்துத்துறை தகவல்!

சென்னை: தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இதன்காரணமாக, நேற்று பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்குள்ளானது. பேருந்துகள் மிகக்குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி 60 சதவீத பஸ்கள் இன்று ஓடும் என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று போதிய அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளான நிலையில், இன்று கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை 5 மணியில் இருந்து சென்னையில் மாநகர பஸ்கள் மற்றும் வெளிமாவட்ட பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 8 மண்டலங்களில் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 98.2 சதவீத மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் மண்டலத்தில் 86 சதவீத பஸ்களும், சேலம் மண்டலத்தில் 96 சதவீத பஸ்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 96 சதவீத பஸ்களும், கோவை மண்டலத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் 17,268 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து மட்டும் 3,233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மட்டும் 61 சதவீதம் இயக்கப்படுகின்றன. மாலை நேரங்களிலும் இதைபோல பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page