ஒரே நேரத்தில் 3 பட வாய்ப்பு.. குஷியில் “குக்கு வித் கோமாளி அஸ்வின் “

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் கோலிவுட்டில் அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் பலரும் மிகவும் பிரபலமாகி விட்டனர்.

ஏற்கனவே புகழ் மற்றம் சிவாங்கி ஆகியோர் பெரிய ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் நடிக்க புக் ஆகி விட்டனர். தற்போது அஸ்வினும் படங்களில் நடிக்க புக் ஆகி உள்ளார். ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே அஸ்வின் நடித்த சிங்கிள் வீடியோ பாடல்கள் தாறுமாறாக ஹிட் அடித்துள்ளன.

தற்போது புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க அஸ்வின் புக் ஆகி உள்ளார். தி ரூட் என்ற ஏஜென்சி மூலம் தான் அஸ்வினுக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஏஜென்சியை நடத்துவது வேறு யாருமில்லை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் தானாம்.

அஸ்வினின் திறமையை பார்த்த ஜெகதீஷ், அதற்கு அங்கீகாரம் வழங்க அவரை ப்ரோமோட் செய்ய நினைத்துள்ளார். இதன் விளைவாகவே அஸ்வினுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் ஒரே சமயத்தில் 3 படங்களில் நடிக்கும் வாய்ப்பு. இந்த படங்களை முன்னணி டைரக்டர்கள் இயக்க உள்ளனராம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட வாய்ப்புக்கள் நிறைய வந்தாலும், தொடர்ந்து சிங்கிள் வீடியோ பாடல்களையும் அடுத்தடுத்து நடித்து, அசத்தி வருகிறார் அஸ்வின். முதல் படத்தில் நடிப்பதற்கு முன்பே இளைஞர்களின் ஃபேவரைட் ஹீரோ ஆகி விட்டார் அஸ்வின்.

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page