26th October 2021

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆயப்பாடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் அப்துல்குத்தூஸ். இவருடைய மனைவி மெகராஜ்கனி(வயது46). இவரது மகள் வெளிநாட்டுக்கு சென்று விட்டு கணவருடன் சொந்த ஊரான நீடூருக்கு திரும்பியுள்ளார். மகளை பார்ப்பதற்காகவும், அவரிடம் நகைகளை கொடுப்பதற்காகவும் ஆயப்பாடியிலிருந்து மயிலாடுதுறைக்கு மெகராஜ்கனி பஸ்சில் வந்தார். மயிலாடுதுறை பஸ்நிலையத்துக்கு வந்து இறங்கிய மெகராஜ்கனி அருகே இருந்த ஒரு பேக்கரியில் இனிப்புகள் வாங்கினார்.

அப்போது அவர் 31 பவுன் நகைகள் இருந்த பையை மறந்து பேக்கரியிலேயே வைத்து விட்டு ஆட்டோவில் நீடூருக்கு சென்று விட்டார். நீடூருக்கு சென்ற மெகராஜ்கனி நகைகள் இருந்த பை மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ஆட்டோ டிரைவர் மற்றும் பேக்கரி கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் நகைகள் இருந்த பையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் மயிலாடுதுறை நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் சில முக்கிய கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பேக்கரி கடையில் மெகராஜ்கனி நகைகள் இருந்த பையை தவறவிட்டு வெளியே வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பேக்கரி கடையில் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பேக்கரியில் இருந்த ஊழியர்கள் மெகராஜ்கனி விட்டு சென்ற நகையை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அந்த பையில் என்ன இருந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் பேக்கரி ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட 3 நெக்லஸ்கள், 3 ஜோடி வளையல்கள் உட்பட 31 பவுன் நகைகளை போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மெகராஜ்கனியிடம் ஒப்படைத்தார். மேலும் கண்காணிப்பு கேமராக்களை துல்லியமாக ஆய்வு செய்து நகைகளை ஒரு மணிநேரத்தில் மீட்க உதவிய ஏட்டு செந்தில்குமார், போலீஸ் சுகுணா ஆகியோரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் இருந்தனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page