30th November 2021

இளம்பெண்ணை கொலை செய்த பள்ளி தோழி உட்பட 4 பேர் கைது!

தஞ்சாவூர் : பள்ளி தோழியை கொலை செய்த சக தோழி அவரது கணவர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாளைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி அனிதா, 30. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. டேவிட் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் அனிதா மாயமானார்.

இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப் பட்டுள்ளதாக, திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் நடத்திய விசாரணையில், அனிதாவை கொலை செய்தது, அவரது எதிர்வீட்டில் உள்ள கார்த்திக், 31, என்பது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அனிதாவும், கார்த்திக்கின் மனைவி சத்யாவும், 28, பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர்.ஒரே ஊரில் திருமணம் செய்துள்ளதால் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். சத்யாவின் வீட்டுக்கு அனிதா அடிக்கடி சென்று வந்துள்ளார். தன் கணவர் பணம் அனுப்பியது தொடர்பாக கூறியுள்ளார்.இதையடுத்து அனிதாவிடம் நைசாக பேசி, சத்யா, கார்த்திக் இருவரும், பல லட்ச ரூபாய் பணத்தையும், 10 சவரன் நகைகளையும் வாங்கியுள்ளனர்.தன் கணவர் வெளிநாட்டில் இருந்து ஓரிரு மாதங்களில் திரும்ப உள்ளதால், கொடுத்த நகை, பணத்தை சத்யா, கார்த்திக்கிடம் அனிதா கேட்டுள்ளார்.

பணம் தர விரும்பாத சத்யா, அனிதாவை கொலை செய்ய திட்டமிட்டு, தன் வீட்டுக்கு வரச்சொல்லி உள்ளார். வீட்டுக்கு வந்த அனிதாவை, சத்யா, கார்த்திக், சத்யாவின் சகோதரர் சரவணன், 30, மாமனார் ரங்கநாதன், 60 ஆகிய நான்கு பேரும் அனிதாவை அடித்து கொலை செய்தனர். பின் ஐந்து கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டனர். இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page