19th January 2022

ரேஷன் கடைகளில் 4,000 காலிபணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் சக்கரபாணி!

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(ஆக-5) ‘மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ துவக்க விழா மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் துறை சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 7 லட்சம் பேர் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவற்றில் மூன்றரை லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் சிறப்பு தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 937 டன் அரிசி மற்றும் 7 ஆயிரத்து 253 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 28 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் 7,500 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்குவதற்கு தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 8000 நியாயவிலைக் கடைகள், வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது அவற்றை சொந்தக் கட்டடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் சுமார் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போலியாக செயல்பட்டுவரும் குளிர்பான தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றினை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page