மயிலாடுதுறையில் ஒரே நாளில் 465 பேர் வேட்பு மனு தாக்கல்!



மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், மணல்மேடு, குத்தாலம். தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு 123 கவுன்சிலர் பதவிகளுக்கு நேற்று ஒரே நாளில் 465 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் 132, சீர்காழி 62, பேரூராட்சிகள் தரங்கம்பாடி 42, மணல்மேடு 77, குத்தாலம் 97, வைத்தீஸ்வரன்கோவில் 55 என்று மொத்தம் 465 பேர் நேற்று ஒரேநாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 603 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.