25th September 2021

ஆலங்குடி பழவாறு பாலத்தில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 6.5 கிலோ கஞ்சா பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனையை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார், குத்தாலம் மற்றும் ஆலங்குடி பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன் (வயது  27) என்பவர் ஆலங்குடி பழவாறு பாலம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் பழவாறு பாலம் பகுதியை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த  6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து,  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டனையும் பிடித்து குத்தாலம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை ைகது செய்து, 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page