3rd December 2021

சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்தில் 7 பேர் பலி; உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியான நிலையில் கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் காயமடைந்தவர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பட்டாசு கடையின் அருகில் இருந்த பேக்கரியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து நேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு அனுமதியை மீறி அதிக அளவிலான பட்டாசுகளை வைத்திருந்தது, விபத்திற்கு காரணமானவர், மரணம் ஏற்படும் என தெரிந்தே அலட்சியமாக இருந்தது என்பன உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக செயலாளராக இருக்கும் செல்வகணபதியும் இந்த தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page