30th November 2021

மயிலாடுதுறை பிரகதி ஆயில்ஸ்-ன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், மயிலாடுதுறையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மாயவரம் பிரகதி ஆயில்ஸ் நிறுவனம் சார்பில் தொற்று நோய் பரவாமல் தடுக்க “கை கழுவுவதின் அவசியம்” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேஷின், சோப்பு திரவம் மற்றும் தண்ணீர் பேரலுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் கூடும் மருத்துவமனை, இரயில் நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் என பிரகதி ஆயில்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டு மாயவரம் பிரகதி ஆயில்ஸ் நிறுவனம் சார்பில் ஏற்படுத்தப்படுத்தப் பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பாராட்டுக்குரியது! மயிலைகுரு.காம் சார்பில் வாழ்த்துகள்!

Leave a Reply

You cannot copy content of this page