1st August 2021

சோனு சூட் செல்போனுக்கு உதவி கேட்டு குவியும் மெசேஜ்கள்!

கொரோனாவில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்துள்ள நடிகர் சோனு சூட்டிடம் உதவிகள் கேட்டு, ஏராளமானோர் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறனர். இதுபற்றிய வீடியோவை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதற்கான உதவிகளை நடிகர் சோனு சூட் செய்தார். அந்த தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ள நடிகர் சோனு சூட், கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

சோனு சூட் செய்த நல உதவிகளைப் பாராட்டி அவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அவர் உருவத்தை விமானத்தில் பதித்து கவுரவித்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து உதவி கேட்டு, தனக்கு ஏராளமான அழைப்புகள் வருவதாக சில நாட்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார்.

‘இந்தியா முழுவதும் இருந்து மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், ஊசிகள் என ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பலருக்கு என்னால் உதவ முடியவில்லை. தயவு செய்து வீட்டில் இருங்கள். முகக் கவசம் அணியுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சோனு சூட் இப்போது மீண்டுள்ளார்.

அவர் தனது செல்போனுக்கு உதவிகள் கேட்டு தொடர்ந்து மெசேஜ்கள் வந்துகொண்டிருப்பதாகக் கூறி அந்த வீடியோவை ட்விட்டரில் இப்போது வெளியிட்டுள்ளார்.

‘உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். அதில் தாமதமோ, தொடர்பு கொள்ள இயலாத நிலையோ ஏற்பட்டால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page