நடிகர் அருண் விஜய் மாமனார் காலமானார் !

தமிழ் திரையுலகில் இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். பெரும் இடைவெளிக்கு பிறகு வந்த அவருக்கு என்னை அறிந்தால் படம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதன்பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் 2ஆவது இன்னிங்ஸில் தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவருடைய நடிப்பில் வெளியான வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத்தாக்க உள்ளிட்ட திரைப்படங்களை பாதர் டச் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலமாக தயாரித்தவர் டாக்டர் என் எஸ் மோகன். இவர் நடிகர் அருண் விஜய்யின் மாமனாருமாவார்.

அருண் விஜய் மீண்டும் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்வதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தவர் இவர் தான். இந்த நிலையில் டாக்டர் என் எஸ் மோகன் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

68 வயதாகும் மோகனுக்கு திடீரென மூச்சு திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.இதற்காக சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் இன்று காலமானார். முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் 19 பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கவிருக்கிறது.இவரது மறைவு திரையுலகிலும் அருண் விஜய் குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திரைபிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே நாளில் இரண்டு பேரை இழந்து நிற்கிறது தமிழ் திரையுலகம். சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்தை இயக்கிய தாமிரா இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தி வந்த சில மணி நேரத்தில் டாக்டர் என் எஸ் மோகன் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: News TM

More News

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

You cannot copy content of this page