3rd December 2021

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

கோவையில் பி.என்.பாளையம், அவிநாசி சாலையில் Rolling Dough Cafe எனும் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று மதியம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின்போது உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டுள்ளன. அதேபோல காலாவாதியான உணவு பொருட்களைக் கண்டறிந்து அலுவலர்கள் அழித்துள்ளனர். ஆய்வின்போது உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதிச்சான்று பெறப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டதாகவும் முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை எனவும் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை என்றும் உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலை உறை, கையுறை அணிந்து பணிபுரியவில்லை எனவும் கூறப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவும் இல்லை. இவ்வளவு குறைபாடுகள் இருக்கும் காரணத்தினால் Rolling Dough Cafe ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

You cannot copy content of this page