திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தில் நலத்திட்ட உதவிகள் செய்துவரும் இரக்க குணம் கொண்ட பத்திரிகையாளர் (மயிலாடுதுறை கொ.அன்புகுமார்)

நடிகர் ராகவா லாரன்ஸ் முகநூல் பக்கத்தில் அவரின் அறச்செயலுக்கு வாழ்த்து.. சமூக ஊடகங்களிலும் வாழ்த்து மழை குவிகிறது…

கஜா புயல் நிவாரணப்பணிகள் தொடங்கி, சுமார் 30-க்கும் அதிகமாக கிராமங்களுக்கு மரக்கன்று கொடுத்து உதவியது, வீடிழந்து கிடந்தவர்களுக்கு வீடுகட்டி கொடுத்தது, என நாகை திருவாரூர் தஞ்சை பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவரும் “அன்பு அறக்கட்டளை” தற்போது
கொரோனா தொற்றால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களின் பசியை போக்குவதற்கு பல நலத்திட்டங்களை செய்துவருகிறது.

இந்த ஊரங்கு காலக்கட்டத்தில் தொடர்ந்து இதுவரை 600 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கி, பசியில் இருப்போருக்கு பேருதவியாய் இருக்கிறது. மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கொ.அன்புகுமார் எந்த வழியிலெல்லாம் உதவி செய்ய முடியுமோ அந்தந்த வகையில் சாமானியர்கள் உதவி வருகிறார். அன்பு அறக்கட்டளையும் அவரது சகோதரரின் சாரல் மீடியாவும் இணைந்து, ஏழை மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டைக்கான புகைப்படம் எடுத்து கொடுத்தல், தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் பாதி விலையில் வீடியோ கவரேஜ் செய்து தருதல், தாய் தந்தையை இழந்த பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு முற்றிலுமாக இலவசமாக வீடியோ மற்றும் ஆல்பம் தயாரித்து கொடுத்தல், வேலையில்லாத கைம்பெண்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தருதல், ஏழை மாணவர்களுக்கு இலவச போட்டோ மற்றும் அனைத்து அரசு சார்ந்த விண்ணப்பங்களையும் தரவிறக்கம் செய்து கொடுத்தல் என பல்வேறு சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் அதை சுற்றியுள்ள பகுதிகள் பயனடைந்து வருகின்றன. உதவி தேவைப்படுவோர் மட்டும் அவசியத்தை இந்த எண்ணில் 8939667467 சொன்னால் உடனடியாக செய்துகொடுக்கப்படும்.

யார் இந்த அன்புகுமார்?

ஏவிசி கல்லூரி மாணவ பத்திரிகையின் ஆசிரியராக இருந்து, நம்ம ஊரு செய்தி போன்ற நாகை மாவட்ட அளவிலான பத்திரிகைகளில் பணியாற்றி, சேட்டிலைட் தொலைக்காட்சிகளான “சன் செய்திபிரிவு”, ஜீ தமிழ் தொலைக்காட்சி, தந்தி டிவியின் மூத்த நிகழ்ச்சி இயக்குனர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் என கடந்த 14 ஆண்டுகளாக மாணவ செய்தியாளராக தொடங்கி, பல்வேறு வளர்ச்சிப்படிகளை எட்டிப்பிடித்திருக்கிறார். இவரது தந்தி டிவியின் நீரும் நிலமும் நிகழ்ச்சியின் மூலம் சுமார் 100 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்திருக்கிறார். ஊடகத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவரும் ஊடகவியலாளர் அன்புகுமாரின் பணியை பாராட்டி அவருக்கு அப்துல்கலாம் விருது, செந்தமிழ் மாமணி விருது, இலக்கிய செம்மல் விருது, பல்துறை வித்தகர் விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்படி தொடர்ந்து பல்வேறு சமூக செயல்களில் ஈடுபட்டுவரும் அவருக்கும் அவரது அறக்கட்டளைக்கும் மயிலைகுருவின் வாழ்த்துகள்.

More News

சென்னையை சேர்ந்த வெள்ளி பதக்கம் வென்ற உலக ஆணழகன் செந்தில்குமரன் மாரடைப்பால் காலமானார்

admin See author's posts

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page