அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதேர்வுத் தேதி அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரி மாணவர்களுக்கான மறுதேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்வுகள் மே 17-ம் தேதி முதல் தொடங்குகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வு கடந்த பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது.

இணைய வழியில் நடைபெற்ற இந்தத் தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரி மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய்தது. இதற்கிடையே கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால், மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வும், கடந்த ஆண்டு நவம்பர் அரியர் தேர்வு மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் அரியர் தேர்வு ஆகியவையும் மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 4 வரை ஆன்லைன் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும்.

மற்ற மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை:

https://acoe.annauniv.edu/download_forms/TIME%20TABLE%20N20/RETEST/UG_ALL_CAMPUSES.pdf

முதுகலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை:

https://acoe.annauniv.edu/download_forms/TIME%20TABLE%20N20/RETEST/PG_ALL_CAMPUSES.pdf

பிஎச்.டி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை:

https://acoe.annauniv.edu/download_forms/TIME%20TABLE%20N20/RETEST/PHD_ALL_CAMPUSES.pdf

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

You cannot copy content of this page