26th October 2021

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

ஆண்டுதோறும் 35-க்கும் மேற்பட்ட தேர்வுகளை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அரசு துறைகளில் நிரப்பப்பட்டு வருகின்றன. கொரோனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை குரூப்-1 தேர்வு, வேளாண்மை துறை தேர்வு மற்றும் உதவி வரைவு அதிகாரி பணியிடத்திற்கான தேர்வு ஆகிய மூன்று தேர்வுகள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கின்றன.

கொரொனோ நோய்த் தொற்று தற்போது குறைந்து வரக்கூடிய நிலையில் இந்த ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த அடிப்படையில் நாளை அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு நடத்த வேண்டிய தேர்வுகள் குறித்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆலோசனையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர் தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கின்றனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ ,குரூப் 4 ஆகிய முக்கிய தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தேர்வுகள் குறித்த அறிவிப்பு மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page