8th December 2021

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர்
நடிகை மீரா மிதுன். இவர், பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளி யிட்டிருந்தார்.

இந்த வழக்கில் இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் அவர் மீது புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய நண்பர் அபிஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அவரை அடைத்தனர்.

இந்நிலையில், சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் Chargesheet பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 30 பக்க குற்றப்பத்திரிகையை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார்.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page