25th January 2022

மயிலாடுதுறை அதிர்ச்சி அளிக்கும் பலி எண்ணிக்கை! : அ.அப்பர்சுந்தரம்

தமிழகத்தில் ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால், 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.இயற்கை பேரிடரின் போது கணிசமான மக்களை நாம் இழந்திருக்கிறோம். 2004ல் ஏற்பட்ட சுனாமி பேரலையின் காரணமாக, 7,000த்துக் கும் மேற்பட்டோரை இழந்தோம்.அதன்பின் புயல், வெள்ளம், வறட்சி பாதிப்பு ஆகியவை தொடர்ந்தாலும், இரண்டு இலக்க அளவிலேயே உயிர் பலி இருந்தது.கொரோனாவால் இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.கடந்த 2020 மார்ச்சில், கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டது. படிப்படியாக உயர்ந்து, ஆகஸ்டில் 3,387 பேர் மரணம்அடைந்தனர்.இதைத் தொடர்ந்து, குறைந்து வந்த பலி எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரியில் 140 பேர் என குறைந்தது.இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக வீசியதில், ஏராளமானோர் பலியாயினர்.

மே மாதம் மட்டும், 10 ஆயிரத்து, 186 பேர் மரணம்அடைந்துள்ளனர்.கொரோனாவின் பாதிப்பு குறித்து அறிந்தும், பலர் அலட்சியமாக உள்ளனர். அதனால் தான் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையிலும், இறப்பு விகிதம் குறையவில்லை .ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்க முடியாது என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் .ஒவ்வொருவரும், கொரோனாவிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அது நம் வீட்டிற்கும், நாட்டிற்கும் செய்யும் சேவை.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page