22nd January 2022

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடதிற்க்கு கல்வித்தகுதி 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.07.2021 ல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) ஆகியோர்க்கு அதிகபட்ச வயது 37, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) ஆகியோர்க்கு 34, இதர வகுப்பினருக்கு 32 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம், கல்வித்தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன், விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ.25/- க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்ட 25*10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ எதிர்வரும் 22.12.2021 மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கிடைக்கதக்க வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

அதற்கு பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மயிலாடுதுறை மாவட்டதை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசின் அடிப்படை பணியாளர் பணியமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page