30th November 2021

உணவின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்களுக்கு தன்னார்வ குழுவினர் உணவுகளை வழங்கியதால் முதியவர்கள் மகிழ்ச்சி

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மயிலாடுதுறை நகரில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டதால் உணவின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்களுக்கு அறம் செய் தன்னார்வ குழுவினர் உணவுகளை வழங்கினர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்து நிலையம் கடைவீதிகள் என அனைத்து வீதிகளும் வரலாறு காணாத அளவில் வெறிச்சோடியது. இந்நிலையில் அனைத்து கடைகளும் உணவகங்களும் மூடப்பட்டதால் மயிலாடுதுறை பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற வயதானவர்கள் உணவின்றி தவித்து வந்தனர். இதையறிந்த மயிலாடுதுறை அறம் செய் தன்னார்வக் குழுவினர் உணவின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவை வழங்கினர். இதுபோல் புதிய பேருந்து நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவின்றி தவித்த ஆதரவற்ற வயதானவர்களை தேடிப்பிடித்து மதிய உணவுகளை வழங்கினர். உணவு வழங்கிய தன்னார்வ குழுவினரை முதியவர்கள் வாழ்த்தினர்.

Leave a Reply

You cannot copy content of this page