25th September 2021

நாகையில் இந்திய இராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்

நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை இந்திய இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 14 மாவட்ட இளைஞர்களும், பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்கலாம். இளநிலை படை அலுவலர் பணிக்கு 30.09.2019 முதல் 29.10.2019 வரையிலும், அவில்தார் பணிக்கு 01.10.2019 முதல் 30.10.2019 வரையிலும் www.joinindianarmy.nic.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மற்றொரு முகாம்: ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுலம், விளையாட்டு மைதானத்தில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில் இதே 15 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04365-253042) விவரங்கள் கேட்டுப் பெறலாம்.

Leave a Reply

You cannot copy content of this page