25th September 2021

தன்னை கைது செய்வதென்றால் கனவில் தான் முடியும்: காவல்துறைக்கு சவால் விடும் மீரா மிதுன்…

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் மீரா மிதுன் மீது, பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பட்டியல் சமூகப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து கொச்சையாகப் பேசிய மீரா மிதுன், திரைத்துறையில் இருந்து பட்டியல் சமூகத்தினரை அகற்ற வேண்டும் எனவும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால் தான் அவர்களை அனைவரும் தூற்றுவதாகவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

பட்டியலின சமூகத்தினர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய மீராமிதுன் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்கு மீரா மிதுன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப் பட்டிருந்த நிலையில், தன்னை தாராளமாக கைது செய்யுங்கள் எனக் கூறியுள்ள மீராமிதுன், காந்தி, நேரு எல்லாம் சிறை செல்லவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன்னை கைது செய்ய முடியாது என்றும், அப்படி நடந்தால் அது கனவில் தான் நடக்கும் என்றும் காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார்.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page