மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!!



விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரம் மேலசாலை தெருவை சேர்ந்த சாமிநாதன் மனைவி கமலா (வயது 60) என்பது தெரிய வந்தது.மேலும் திருட்டுப்போன நகை, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து அவர் தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குத்தாலம் போலீசாருக்கு மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவிட்டது. இவ்வாறு கோர்ட்டு உத்தரவிட்டு 4 மாதங்கள் கடந்த பின்னரும் குத்தாலம் போலீசார் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் போலீசார் தடுத்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.