25th January 2022

மயிலாடுதுறை அருகே பஸ் மோதி மொபட்டில் சென்ற ஏ.வி.சி கல்லூரி மாணவர் இறப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரகமதுநிசார் மகன் யூசுப்கான் (வயது 19). இவர் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 4 மணியளவில் கல்லூரி முடிந்து செல்போன் பழுது நீக்குவதற்காக மொபட்டில் மயிலாடுதுறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம், பர்மா காலனி அருகே சென்ற தனியார் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். இதில் பஸ் மொபட் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே யூசுப்கான் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த யூசுப்கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page