25th January 2022

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ அழகு ஜோதி அகெடமியில் ரத்ததான முகாம்

கொரோனா பாதிப்பு நேரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மயிலாடுதுறையில் ரத்ததான முகாம் – ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் உள்ள தனியார் பள்ளி (அழகு ஜோதி அகாடமி) மற்றும் பாரதிய ஜெயின் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கொரோனா பாதிப்பு நேரத்தில் அரசு மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ரத்ததான முகாமில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், ஜெயின் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், உதிரம் கொடுத்து உயிரை காப்போம் என்ற தன்னம்பிக்கையோடு ரத்ததானம் வழங்கிய கொடையாளர்களுக்கு அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினரும், பாரதிய ஜெய்சங்க நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page