போக்சோ வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா, திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

போக்சோ வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவுள் எனக் கூறிக்கொண்டு, தான் நடத்தி வந்த சுஷில்ஹரி இண்டர்நேசனல் பள்ளியில், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். சிவசங்கர் பாபாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் சிபிசிஐடி போலீசார், மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே அமைந்துள்ள சுஷில்ஹரி இண்டர்நேசனல் பள்ளியில், சிபிசிஐடி போலீசார் சுமார் 1 ஒரு மணி நேரமாக ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி அதிகாரி விஜயகுமார் தலைமையில் 2 ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு சுமார் 1 ஒரு மணி நேரம் நடத்திய ஆய்வில் லேப்டாப், கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சிவசங்கர் பாபா அறைகளுக்கு சீல் எதுவும் வைக்கவில்லை என தெரிவித்த போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆசிரியைகள் தீபா, பாரதி மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். பள்ளியில் டிசி வாங்க காத்திருந்த பெற்றோர்களிடம் விவரங்களை கேட்டறிந்து நிர்வாகத்திடம் அவர்களுக்கு உடனடியாக டிசிகளை வழங்கும்படி கூறினர்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page