20th September 2021

செப்.,ல் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: ஆர்.பி.ஐ.,

புதுடில்லி: செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அம்மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று போன்ற பேரிடர் காலத்தில் வங்கிகளின் செயல்பாடுகளை பெற்றுக்கொள்வதில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது வங்கிகள் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆக., மாதத்திலும் 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்னும் 4 நாட்களில் துவங்கவுள்ள செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை தின பட்டியலை வெளியிட்டுள்ளது. எனவே, வங்கி விடுமுறைகளை பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம்.

வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்படலாம். ஆக முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம். செலுத்த வேண்டிய இடங்களுக்கும் முன்னதாக செலுத்தி விடலாம்.விடுமுறை நாட்கள்செப்., 5, 12, 19, 26ம் தேதிகளில் ஞாயிறு விடுமுறை. செப்., 11ம் தேதி, 2வது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி, 25ம் தேதி 4வது சனிக்கிழமை.செப்., 8ம் தேதி – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.செப்., 9ம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.செப்., 10ம் தேதி – விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.செப்., 17ம் தேதி – கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது.செப்., 20ம் தேதி – இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.செப்., 21ம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page