25th January 2022

மயிலாடுதுறையில் முப்பெரும் விழா மற்றும் நூல் வெளியீடு

மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை கிங்ஸ் மற்றும் லதா பதிப்பகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா, சிறுகதை எழுத்தாளர் பா.அய்யாசாமியின் ஊடக வேதம் எனும் குறும்படம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத் தலைவர் க.ராஜேந்திரன் தலைமை வகித்தார். வணிக சங்கங்களின் பேரவை மாவட்ட பொருளாளர் ரா.ஜெயக்குமார் வரவேற்புரை வழங்கினார். மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சி.சிவசங்கரன் நூல் திறனுரை ஆற்றினார். பூம்புகார் கல்லூரி உதவி பேராசிரியை து.சந்தானலெட்சுமி தமிழ்த்தாயின் தவப்புதல்வன் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் எம்.என்.ரவிச்சந்திரன் நூல் மற்றும் குறும்படத்தை வெளியிட்டார்.

நூலின் முதல் பிரதியை மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் ச.பவுல்ராஜ், சிறப்புத் தலைவர் சு. சிவலிங்கம், எஸ். வி.பாண்டுரங்கன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை கிங்ஸ் தலைவர் பி.திருமாவளவன் வாழ்த்துரை வழங்கினார். சிவராமன் சரண் தொகுத்து வழங்கினார். முடிவில், நூலாசிரியர் பா.அய்யாசாமி நன்றி கூறினார்.

 

Leave a Reply

You cannot copy content of this page