மயிலாடுதுறை வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு!!



மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் பிருந்தாவன் தெருவை சேர்ந்தவர் நூருல்அமீன். இவருடைய மனைவி நூருல்ஜான் (வயது 38). கடந்த 28-ந் தேதி நூருல்அமீன் வேலைக்காக துபாய் சென்று விட்டார். அதன்பிறகு நூருல்ஜான் தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நூருல்ஜான் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு இரும்பு கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் வீட்டின் கதவு உள்பூட்டு, தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நூருல்ஜான் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 3 பவுன் சங்கிலி, மோதிரம் உள்பட 5 பவுன் நகைகளை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது.