அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு !

கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது !

குனியமுத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக துண்டு அணிந்து,கட்சி கொடி கட்டிய காரில் வந்த எஸ்.பி.வேலுமணி; தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு.

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திகேய சிவசேனாபதி தாக்கப்பட்டார். அவர் வாக்குச்சாவடிக்குள் வெளியேபி வராதபடி உள்ளே வைத்து பூட்டப்பட, சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேய சிவசேனாபதியை மீட்டு காரில் அனுப்பி வைக்க முற்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக மற்றும் பாஜகவின சிவசேனாபதி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்தினர். இது மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்தார்.

இந்நிலையில் குனியமுத்தூர் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் அமைச்சர் வேலுமணி தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கட்சி கொடியுடன் காரில், அதிமுக துண்டு அணிந்து சென்றார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் தொண்டாமுத்தூர் தொகுதி மண்டல அலுவலர் ராஜா முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட குனியமுத்தூர் போலீசார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source : Top Tamil News

More News

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

You cannot copy content of this page