22nd January 2022

மயிலாடுதுறையில் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி காவிரி டெல்டா பாசனாதரர் முன்னேற்ற சங்கத்தினர் மனு

விவசாயிகளுக்கு 100% சதவீதம் நிவாரணம் வழங்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் முன்னிலையில் காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குரு. கோபிகணேசன் மற்றும் நிர்வாகிகள் மயிலாடுதுறை கோட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்கள். இதில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் 70 சதவீத நிலங்களில் நிவாரணத்திற்காக கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவருகிறது. தமிழக அரசு நூறு சதவீத நிலங்களையும் கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். சிறுவிவசாயிகள் பெருவிவசாயிகள் என்று பாகுபாடு காட்டாமல் எவ்வளவு நிலம் இருந்தாலும் அவர்களுக்கு நிலத்தின் அடிப்படையில் மொத்த நிலத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ஒருவருக்குத் தான் நிவாரணம் என்ற முறையை மாற்றி குடும்பத்தில் உள்ள விவசாயிகள் அத்தனை பேருக்கும் வழங்க வேண்டும். நெல்பயிர் மட்டுமல்லாமல் வாழை, கரும்பு, மலர் செடிகள் தோட்டக்கலை பயிர்கள் கணக்கிட்டு அவற்றிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மழையினால் பழுதடைந்த மின் மோட்டார்களுக்கு புதியதாக மின்மாற்றி அமைத்து தரவேண்டும்.அப்போது காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் குரு கோபி கணேசன், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஏ ஆர் எஸ் மதியழகன், துணைத் தலைவர் கண்ணன், செயலாளர்கள் முருகன், ராஜாராமன்,கொற்கைகண்ணன், ரமேஷ், செந்தில்,சேட்டு, பக்கிரிசாமி, இயற்கை விவசாயி ராமலிங்கம் உட்பட பலர் உடன் பங்கேற்றார்கள்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page