26th October 2021

தூய்மைப் பணியாளர்கள் இறந்தால் மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு!

நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.மேலும், தூய்மைப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண் குமார் மிஸ்ரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், மனிதக் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களது மரணத்திற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, சலுகைகளை வழங்க வேண்டும்.

மனிதக் கழிவுகளை அள்ளுதல், அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான கையுறைகள், தலைக்கவம், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை மத்திய அமைச்சரவையின் அனைத்துத் துறைகளுக்கும், மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page